நட்சத்திர ஓட்டலில் தங்கி ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர்

லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டல் | கோப்புப்படம்
லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டல் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டலில் முகமது ஷெரீப் என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அவர், தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாகவும் அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் ஃபலா பின் சயத் அல் நஹ்யானின் அலுவலக ஊழியர் என்றும் கூறியுள்ளார். சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய அவர் கடந்த நவம்பர் 20-ம் தேதி, தகவல் தெரிவிக்காமல் ஓட்டலை விட்டு வெளியேறிவிட்டார்.

அவர் ரூ.35 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ரூ.11.5 லட்சம் மட்டுமே செலுத்தியுள்ளார். ரூ.23 லட்சத்தை செலுத்தவில்லை. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் டெல்லி போலீஸில் புகார் அளித்தனர். அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in