

ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தைப் பயன்படுத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர் நீரஜ் சேகர் எழுப்பிய கேள்விக்கு ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அரசுக்கு இது பற்றி தெரியும், பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை” என்றார் ரத்தோர்.
ஆனால் நீரஜ் சேகர், அனுமதி அளிக்கவில்லையெனில் இதன் மீதான நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரத்தோர் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகம் இதனை சட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றார்.