கேரளா | எர்ணாகுளத்தில் ஒரே உணவகத்தில் உணவு சாப்பிட்ட 68 பேர் மருத்துவமனையில் அனுமதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரவூர் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்ட சுமார் 68 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சீல் வைத்துள்ளதாகவும் தகவல்.

இந்த சம்பவம் செவ்வாய்கிழமை அன்று நடந்துள்ளது. முதலில் 11 பேர், பின்னர் 35 பேர் என இப்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 வரை உயர்ந்துள்ளதாக தகவல். அந்த உணவகத்தின் பேர் மஜ்லிஸ் என தெரிகிறது. குழிமந்தி, ஷவாய் மற்றும் அல்-ஃபாம் போன்ற உணவுகளை சாப்பிட்டவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

பரவூர், திருச்சூர், களமசேரி மற்றும் கோழிக்கோடு போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயணத்தின் போது அந்த உணவகத்தில் சாப்பிட்டு சென்றுள்ளனர்.

இதே உணவக குழுமத்தின் மற்றொரு உணவகம் கடந்த மாதம் பழைய தேநீரில் கலர் சேர்த்தமைக்காக மூடப்பட்டது. கேரள மாநிலத்தில் அண்மைய காலமாக சில உணவகத்தில் உணவு சாப்பிடும் நபர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in