ஹைதராபாத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (34), இவரது மனைவி சிந்தூரா. இவர்களது மகள் ஆத்யா (4). இவர்களுடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்தார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு கார் ஷோரூமில் பிரதாப் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி சிந்தூரா, ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை தினத்தில் இவர்களது வீடு காலை முதல் இரவு வரை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தார், தர்னாகா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டின் உள்ளே 4 பேர் இறந்து கிடந்தனர். இதில் பிரதாப் மட்டும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. மற்றவர்கள் மர்மமான முறையில் வீட்டில் ஆங்காங்கே சடலமாக கிடந்தனர். ஆதலால், இதனை மர்மச்சாவு என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in