திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி முதல் ஆண்டாள் திருப்பாவை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி முதல் ஆண்டாள் திருப்பாவை
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 17-ம் தேதி முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக, ஆண்டாள் திருப்பாவை பாடப் பட்டு திருப்பள்ளி எழுச்சி நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு நாள்தோறும் அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவை நடத்தப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சிக்கான இந்த ஐதீகம் மார்கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்கள் மூலம் பாடப்பட்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாதத்தையொட்டி வரும் 17-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை திருப்பாவை பாடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in