Published : 15 Jan 2023 07:01 AM
Last Updated : 15 Jan 2023 07:01 AM
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தங்க, வைரநகை கண்காட்சி நடைபெற்றது. இதில் 1,300-க்கும் மேற்பட்டநிறுவனங்கள் பங்கேற்றன. 2,500 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் 800 நகரங்கள், 80 வெளிநாடுகளை சேர்ந்த 32,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் பிரதமர் மோடியின் மார்பளவு தங்க சிலை இடம்பெற்றிருந்தது. 156 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட இந்த சிலை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த சிலையைவைத்த நிறுவனம், சிலையை வடிவமைத்த நகை தொழிலாளிகுறித்து எவ்வித விவரமும் கண்காட்சியில் வெளியிடப்படவில்லை.
மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் சோகதா என்பவர் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட பிரதமர் மோடி சிலைகளை பல ஆண்டு களாக விற்பனை செய்துவருகிறார். 150 கிராம் வெள்ளியில் 7 அங்குல உயரத்தில் தயாரிக்கப்படும் மோடி சிலைகள் தலா ரூ.11,000-க்கு விற்கப்படுகிறது. பிரதமர் மோடி சிலைகள் அமோக மாக விற்பனையாகி வருவதாக சோகதா பெருமிதத்துடன் கூறுகிறார். இதேபோல இந்தூரை சேர்ந்த நிர்மல் வர்மா, பிரதமர் மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை விற்பனை செய்து வருகிறார்.
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் அவர்அணியும் ஆடை, கண்ணாடி உள்ளிட்டவை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அரசுவிழாக்களில் அவர் பங்கேற்கும்போது அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிவது வழக்கம். இதுகுறித்து சமூக வலைதளவாசிகள் பதிவிட்டுள்ள கருத்துகளில், "திரைப்பட நட்சத்திரங்களைவிட பிரதமர் மோடி மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினி காந்தைவிட பிரதமர் நரேந்திர மோடி பிரபலமாகி இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT