Published : 15 Jan 2023 07:07 AM
Last Updated : 15 Jan 2023 07:07 AM
ஹைதராபாத்: ஹைதராபாத் யூசப்கூடா ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரிஜ்வான் (23). ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு விநியோகித்துவந்தார். இவர் கடந்த புதன்கிழமை இரவு, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு விநியோகிக்க சென்றார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த நாய், ரிஜ்வானை கடிக்க ஓடி வந்தது. இதனால் பயத்தில் ஓடிய ரிஜ்வான் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தார்.
தலையில் பலத்த காயத்துடன் நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே உணவு ஆர்டர் செய்த சோபனாவின் அலட்சியமே இதற்கு காரணம் என்று ரிஜ்வானின் சகோதரர் முகமது போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT