

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து வியாழக்கிழமையுடன் ஒரு மாதம் நிறைவாகியுள்ள நிலையிலும் வங்கி, ஏடிஎம்களில் பணத் தட்டுபாடு தீரவில்லை. இதனால், நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரு பகுதியில் உள்ள 10 ஏடிஎம்களில் இரண்டு அல்லது மூன்று ஏடிஎம்களே திறந்திருக்கும் நிலையில், அவற்றிலும் கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கின்றன.
அதேபோல், மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் பொறுமையாகக் காத்திருந்து, தங்கள் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை நீடிக்கிறது.
நீங்கள் மேலே உள்ள படத்தில் காண்பது, தெலங்கானா மாநிலத்தின் கம்மம் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் வங்கியில் தங்கள் பணத்தை எடுக்க நீ......ண்ட வரிசையில் காத்திருக்கும் உள்ளூர் மக்களை!
படங்கள்: ஜி.என்.ராவ்