

மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் (80) தனது பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத் திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரி வித்தன.
கடந்த 2010 ஜனவரி 24-ம் தேதி மேற்கு வங்க ஆளுநராக எம்.கே. நாராயணன் பதவியேற்றார். அவரது பதவிக் காலம் 2015 ஜனவரி 23 வரை உள்ளது.
இந்நிலையில் தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றவுடன் முந்தைய ஆட்சி யில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.
அதன்படி உத்தரப் பிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர் தத்தா, நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார் ஆகி யோர் தங்கள் பதவியை அண்மை யில் ராஜினாமா செய்தனர். கர்நாடக ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜின் பதவிக் காலம் அண்மையில் நிறை வடைந்தது.
இந்த வரிசையில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணனை பதவி விலகக் கோரி மத்திய உள் துறை செயலாளர் அனில் கோஸ்வாமி கடந்த வாரம் தொலை பேசியில் வலியுறுத்தியதாகவும் அதற்கு அவர் கால அவகாசம் கோரியதாகவும் தெரி கிறது.
இந்நிலையில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் பேர வழக்கில் எம்.கே. நாராயணனிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக் கிழமை விசாரணை நடத்தினர். பதவியில் இருக்கும் ஆளுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய் தார். ஜூலை 4-ம் தேதி அவர் கொல் கத்தாவைவிட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1955-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான நாராயணன் மத்திய உளவுத் துறை இயக்குநராகப் பணி யாற்றிவர் ஆவார். அதன்பின்னர் கடந்த ஆட்சியில் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக் கப்பட்டார். அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அவரது ராஜினாமா குறித்து மேற்கு வங்க மாநில அரசின் மூத்த அமைச்சர்கள் கூறியபோது, மத்தி யில் ஆட்சி மாறியவுடன் ஆளுநர் களை மாற்றுவது ஜனநாயக விரோ தம், எம்.கே. நாராயணனுக்கு விரை வில் பிரிவு உபசார விழா நடத்தப் படும் என்றனர்.