பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை ரத்து செய்ய பொதுநல மனு தாக்கல்

பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை ரத்து செய்ய பொதுநல மனு தாக்கல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு பிஹார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து அகிலேஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், “மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் பட்டியல் 1-ல் இடம்பெற்றுள்ளது. எனவே, அதுபோன்ற கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, பிஹார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக 2022-ம் ஆண்டு ஜுன் 6-ல் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இதேபோன்றதொரு வழக்கு ஜனவரி 20-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது உடன்சேர்ந்து இந்த பொதுநல மனுவும் விசாரிக்கப்படும்" என்று தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in