

ஹைதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் சார்பில் நேற்று பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது:
எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு நான் தகுதி உள்ளவனா எவ தெரியவில்லை. எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்திருந்து இந்தக் காட்சியை பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். எனினும் எனது தாயாரின் பிறந்த ஊரான இதே ஹைதராபாத்தில் இந்தப் பட்டம் பெறுவதை நான் பெருமையாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்