லட்சத்தீவு எம்.பி முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

லட்சத்தீவு எம்.பி முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

கொச்சி: கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

லட்சத்தீவு பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது பைசல். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது இவருக்கும், லட்சத்தீவு முன்னாள் எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது முகமது பைசல், அவரது சகோதரர்கள் மற்றும் பலர் முகமது சலேவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முகமது சலே, விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து முகமது பைசல், அவரது சகோதரர்கள் உட்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கிய லட்சத்தீவு நீதிமன்றம் எம்.பி முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைத்துள்ளதால், இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, நிவாரணம் பெறவில்லை என்றால், முகமது பைசலின் அரசியல் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in