

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி கொல்லப்பட்டார். ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
டிரால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. . இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதோடு தீவிரவாதியிடம் இருந்து ஒரு ஏகே-47 வகை துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அங்கு கூடிய பொதுமக்கள் கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடலை ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.