2040-க்குள் உலக எரிபொருள் தேவையில் இந்தியா 25 சதவீத பங்களிப்பினை வழங்கும்

2040-க்குள் உலக எரிபொருள் தேவையில் இந்தியா 25 சதவீத பங்களிப்பினை வழங்கும்

Published on

புதுடெல்லி: மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறியது: வரும் 2040-க்குள் உலகளாவிய எரிபொருள் தேவையில் இந்தியா 25 சதவீத பங்களிப்பினை வழங்கும். அதேபோன்று, 2025-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கும் எட்டப்படும்.

2013-14-ல் 1.53% ஆக இருந்தபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 2022-ல் 10.17%த்தைஎட்டியது. எனவே, அடுத்தபடியாக 2025 முதல் 2030-க்குள் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 20% ஆக உயர்த்துவதே அரசின் புதிய இலக்காக உள்ளது.

2006-07-ல் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 27-ஆக மட்டுமே இருந்தது. இது, 2021-22-ல் 39 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடனும் இந்தியாவின் உறவு மிகவும் வலுவடைந்துள்ளது. ஹரியாணா வில் பானிபட் (பரலி), பஞ்சாபில் பத்தின்டா, ஒடிசாவில் பர்கர்க், அசாமில் நுமலிகர்க் (பாம்பூ) கர்நாடகாவில் தேவங்கெரே உள்ளிட்ட இடங்களில் ஐந்து 2ஜி எத்னால் பயோ சுத்திகரிப்பு ஆலைகளை அரசு அமைத்து வருகிறது.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 2024 மே மாதத்துக்குள் 22,000 மாற்று எரிபொருள் (இவி சார்ஜிங்/சிஎன்ஜி/எல்பிஜி/எல்என்ஜி/சிபிஜி) நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in