டெல்லியில் பனிமூட்டம்: 94 ரயில்கள் தாமதம்; 2 ரயில்கள் ரத்து

டெல்லியில் பனிமூட்டம்:  94 ரயில்கள் தாமதம்; 2 ரயில்கள் ரத்து
Updated on
1 min read

டெல்லியில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ரயில், விமான போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலையில் பனி மூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக 94 ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக பயணிக்கும் என்றும், இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என டெல்லி ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பனிமூட்ட நிலவரம் குறித்து டெல்லி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், "கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக தலைநகர் டெல்லியில் 400 மீட்டர் தொலைவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு 97% உள்ளது. வெப்பத்தின் அளவு 8.7 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் நிலவும் கடுமையான பனிபொழிவின் காரணமாக இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 94 ரயில்கள் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் கடுமையான பனி பொழிவினால் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in