

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த மாதம் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் பாரத ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்று அச்சடிக்க ரூ.3.09 காசு செலவானது. அதே செலவிலேயே புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது. இதே போல் 1000 ரூபாய் நோட்டு ஒன்று அச் சடிக்க அரசுக்கு ரூ.3.54 செல வானது. அதே செலவில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது.