சீன மாஞ்சா கயிறு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அகமதாபாத்: அபாயகரமான காற்றாடிகள் பறக்கவிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் 2016-17-ம் ஆண்டே 2 பொது நல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், மாதக்கணக்கில் காற்றாடி பறக்கவிட அனுமதிக்காமல், ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகளில் மட்டும் காற்றாடி பறக்க விடுவதற்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.

காற்றாடி பறக்கவிடுவதற்கு சீன மாஞ்சா நூல்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டி.வி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். ராய்பூர் மற்றும் வால்ட் நகர் ஆகிய இடங்களில் ஆட்டோ ரிக்ஷாவில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

கட்டுப்பாடுகள் விதிக்க..

அகமதாபாத் நகரில் 56 எல்இடி திரைகளை நிறுவி நைலான் நூல் மாஞ்சா பாதிப்பு குறித்த தகவல்களை மக்கள் இடையே பரப்ப வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் இடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 2 நாட்களுக்கு மட்டும் காற்றாடி பறக்கவிடும்படி கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in