வெறுப்புணர்வுக்கு எதிராக தேசிய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தி பேட்டி

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உடன் ராகுல் காந்தி
குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உடன் ராகுல் காந்தி
Updated on
1 min read

குருஷேத்ரா: ஹரியானா மாநிலம் குருஷேத் ராவில் நேற்று தேசிய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது.

சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்புணர்வு, அச்சம் மற்றும் வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக நான் தேசிய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்கிறேன். நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். இந்த யாத்திரையில் நாட்டு மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நேரடியாக கேட்க முடிகிறது.

நாங்கள் யாத்திரை செல்ல, செல்ல, வரவேற்பும் அதிகரிக்கிறது. இந்தியாவின் குரல் நசுக்கப்படுகிறது. நாடு பிரிக்கப்படுகிறது என்ற அச்சம் மக்களிடையே பரவுகிறது. ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொன்று, ஒரு மதத்துக்கு எதிராக மற்றொரு மதம் என பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு எதிராகத்தான் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

நாம் நமது நாட்டை, மக்களை, விவசாயிகளை, ஏழைகளை நேசிக்கிறோம். அவர்களுடன் இணைந்து செல்ல விரும்புகிறோம். நாட்டின் குரலை மக்கள் கேட்க வேண்டும் என்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். நாட்டில் பொருளாதார ரீதியாக சமத்துவம் இன்மை நிலவுகிறது. ஊடகம் மற்றும் இதர நிறுவனங்கள் சிலரது கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in