Published : 07 Dec 2016 10:47 AM
Last Updated : 07 Dec 2016 10:47 AM

கேரளாவில் அரசு விடுமுறை: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முதல்வர் ஜெயலலிதா மறைவை யொட்டி கேரளாவில் நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் துக்கமும் அனுசரிக் கப்படுகிறது.

கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத் தப்பட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியபோது, அரசியல், நிர்வாகத் திறன் மிக்க தலைவர் முதல்வர் ஜெயலலிதா, இரு மாநிலங்களுக்கு இடையில் அமைதி நிலைத்திருக்க பாடுபட்டவர், ஏழைகளின் நலனுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

கேரள அரசு சார்பில் நேற்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள் செயல்படவில்லை. பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவுக்காக கேரள அரசு சார்பில் 3 நாட்கள் துக்கமும் அனுசரிக்கப்படுகிறது.

கொச்சியில் தமிழர்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அப்பகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்து நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x