

பெங்களூரு: கர்நாடகாவில் கோவிலில் நுழைந்த தலித் பெண் ஒருவரை அறங்காவலர் ஒருவர் கடுமையாக தாக்கி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெண்ணை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள அமிர்தல்லி பகுதியில் உள்ள லஷ்மி நரசிம்ம கோவிலுக்கு டிசம்பர் 21 ஆம் தேதி தலித் பெண் ஒருவர் வழிபாட்டுக்காக சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலின் அறங்காவலர் முனிகிருஷ்ணாவுக்கும், பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோவிலின் உள்ளே நுழைந்த பெண்ணை பலமாக தாக்கி அவரது தலைமுடியை இழுந்து கோவிலின் வெளியே தள்ளுகிறார் முனிகிருஷ்ணா. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தின.
மேலும் பாதிக்கப்பட்ட பெண், அமிர்தல்லி காவல் நிலையத்தின் அறங்காவலர் முனி கிருஷ்ணா மீது புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் முனி கிருஷ்ணா போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு நிறுத்தப்பட்டதாக கர்நாடக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து முனிகிருஷ்ணா போலீஸாரிடம் கூறும்போது, “ அப்பெண் பெருமாள் தனது கணவர் என்றும், கருவறையில் உள்ள சிலைக்கு அருகில் அமர விரும்புவதாகவும் கூறினார். அவரது கோரிக்கை மறுக்கப்பட்டபோது அவர் பூசாரி மீது துப்பினார். இதனால் அவரை அடித்து வெளியேற்றினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
வைரலான வீடியோ: