

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் அக்ஷய் கிரிஷ்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான பெங்களூருவுக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நக்ரோட்டா பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந் தனர். தாக்குதலில் உயிரிழந்த மேஜர் அக்்ஷய் கிரிஷ் குமார் (31) பெங்களூருவை சேர்ந்தவர்.
மேஜர் அக்்ஷய் கிரிஷ்குமாரின் உடலை தனி விமானம் மூலம் வியாழக்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க உள்ளது. பெங்க ளூருவில் எலஹங்கா பகுதியில் உள்ள அக்ஷய் கிரிஷ்குமாரின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக் காக வைக்கப்படும். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த அக்ஷய் கிரிஷ் குமார்-சங்கீதா தம்பதிக்கு 3 வயதில் மகள் இருக்கிறார். குமாரின் திடீர் மறைவு குறித்த தகவல் அறிந்த அவரது மனைவி, மகள் மற்றும் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும் போது, “தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மேஜர் அக்ஷய் கிரிஷ் குமாரின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தியாகம் மாநிலத்துக்கு பெருமை சேர்த்து உள்ளது. மறைந்த ராணுவ அதிகாரியின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளைச் செய்ய அரசு தயாராக உள்ளது” என்றார்.