ஜெ. சொத்துக்களை கையகப்படுத்த கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெ. சொத்துக்களை கையகப்படுத்த கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்தக் கோரி பொதுநல மனுத் தாக்கல் செய்த தனியார் அறக்கட்டளைக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத் தில் திராட்சை தோட்டம், வீடு உள்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் அந்தச் சொத்துக்களை தெலங்கானா அரசு கையகப்படுத்த வேண்டும் எனக் கோரி கரீப் இண்டர்நேஷனல் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம் ‘‘ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என மனுதாரர் எப்படி கூறலாம்? அவருக்கு சகோதரர் தரப்பில் வாரிசு இருக்கிறது. அதனால் இது வாரிசு இல்லாத சொத்து என கூற முடியாது. பொதுநலனுக்காக இவ்வழக்கு தொடரப்பட்டதாக தெரியவில்லை. வெறும் விளம் பரத்திற்காக தொடரப்பட்டதா கவே தெரிகிறது. எனவே இம் மனுவை தாக்கல் செய்த அறக் கட்டளைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை 4 வாரத்துக்குள் தெலங்கானா அரசு வசூலிக்க வேண்டும்’’ என உத்தர விட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in