

பழம்பெரும் தெலுங்கு நடிகை யான மறைந்த சூர்யகாந்தம் செய்த புளியோதரைக்கு ஜெயலலிதா அடிமை என்றே கூறலாம் என தெலுங்கு திரை உலகினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழுக்கு இணை யாக தெலுங்கு திரைப்படங் களிலும் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த காலகட்டத்தில் பிரபல மான தெலுங்கு நடிகையாக இருந்தவர் சூர்யகாந்தம். இவர் படப்பிடிப்புக்கு வரும் போது, தானே செய்த புளியோதரையைக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுப்பது வழக்கம்.
ஒரு தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த ஜெயலலிதா, சூர்யகாந்தத்தின் புளியோதரையை சாப்பிட்டார். அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு நாள் படப்பிடிப் பின்போது சூர்யகாந்தம் கொண்டு வந்த புளியோதரையை சாப்பிடும் போது ஜெயலலிதாவுக்கு விக்கல் வந்துள்ளது.
அப்போது திடீரென ஒரு கை ஜெயலலிதாவின் தலையை லேசாக தட்டுகிறது. திரும்பிப் பார்த்தால் நடிகை சூர்யகாந்தம். அப்போது சூர்யகாந்தத்தைப் பார்த்து ஜெயலலிதா, “உன்னிடம் தாய்மை இருப்பதால்தான் புளியோதரை இவ்வளவு ருசியாக உள்ளது” என்று கூறினாராம். இதைக் கேட்டு சூர்யகாந்தம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாராம்.
பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகை சூர்யகாந்தம் உயிரிழந்தார். இந்தச் செய்தியை அறிந்ததும், அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெய லலிதா, முக்கிய அலுவல் களுக்கு மத்தியிலும் நேரில் சென்று சூர்யகாந்தத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி னார். அப்போது ஜெயலலிதா, “என் உயிர் உள்ளவரை என் மனதைவிட்டு நீங்காத சம்பவங் களையும் மனிதர்களையும் நான் மறக்க மாட்டேன்” என்று கூறினாராம்.