சபரிமலை நெரிசலில் 25 பேர் காயம்: 2 பேர் கவலைக்கிடம்

சபரிமலை நெரிசலில் 25 பேர் காயம்: 2 பேர் கவலைக்கிடம்

Published on

சபரிமலை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை வழிபட நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

மண்டல பூஜை இன்று நடைபெறு வதையொட்டி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஐயப்பனுக்கு சாத்தப்படுவதற்காக தங்க அங்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இது நேற்று மாலை சன்னிதானம் வந்தடைந்தது.

அப்போது சன்னிதானத்துக்கும் மாளிகைபுற கோயிலுக்கும் இடையே குவிந்திருந்த பக்தர் கள் தங்க அங்கியை தொட முண்டி யடித்ததால் கூட்டநெரிசல் ஏற் பட்டது. இதில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சன்னி தானம் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீ ஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2011 ஜனவரியில் சபரி மலையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 106 பக்தர்கள் உயிரிழந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in