விமானத்தில் போதையில் மீண்டும் சிறுநீர் கழித்த சம்பவம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடந்த நவம்பர் 26-ம் தேதி பயணம் செய்த முதல் வகுப்பு பயணி ஒருவர் மது போதையில், அருகில் இருந்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். பெண் பயணி அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுநீர் கழித்த பயணியை தேடிவருகின்றனர்.

இச்சம்பவம் நடந்த 10 நாளில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து டெல்லிக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. மது போதையில் இருந்த பயணி, அருகில் இருந்த பெண் பயணியின் கம்பளியில் சிறுநீர் கழித்துள்ளார்.

விமானம் டெல்லி வந்ததும் இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு, பைலட் தகவல் தெரிவித்தார். இரு பயணிகள் இடையே பரஸ்பர சமாதானம் ஏற்பட்டதையடுத்து, சிறுநீர் கழித்தவர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். இதையடுத்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in