மோமின்பூர் வன்முறை வழக்கு - மே.வங்கத்தில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை

மோமின்பூர் வன்முறை வழக்கு - மே.வங்கத்தில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மோமின்பூரில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மயூர்பஞ்ச் பகுதியில் பல வீடுகள் சூறையாடப்பட்டன. கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்துக்களுக்கு எதிரான இந்தக் கலவரத்தில் மாநில காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடினர். கலவரப் பகுதியில் அமைதியைக் காக்க மத்திய துணை ராணுவப் படையை அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கலவர வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும் குற்றச் செயல்களின் தீவிரம் மற்றும் பிற காரணிகளை கருத்தில்கொண்டு இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்கலாமா என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய உள் துறை அமைச்சக உத்தரவின் பேரில் இந்த வழக்கை என்ஐஏ ஏற் றது. கடந்த ஆண்டு அக்டோபரில் வழக்கை மறுபதிவு செய்து என்ஐஏ விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in