ரொக்கப் பணமில்லா சமுதாயத்தை உருவாக்க நாடாளுமன்ற உணவகத்தில் கார்டில் பணம் செலுத்தும் வசதி

ரொக்கப் பணமில்லா சமுதாயத்தை உருவாக்க நாடாளுமன்ற உணவகத்தில் கார்டில் பணம் செலுத்தும் வசதி
Updated on
1 min read

ரொக்கப் பணமில்லா சமுதா யத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, நாட்டு மக்கள் நேரடி பணப் பரிவர்த்தனையை கைவிட்டு மின்னணு முறைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி வருகிறார். அதாவது டெபிட், கிரடிட் கார்டுகள், இணையதளம், செல்போன்கள் மூலம் வங்கி சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

ரொக்கப் பணப் பரிமாற்றத்தின் மூலம் கறுப்புப் பணம் அதி கரிப்பதாகவும், ஊழல் அதிகரிப் பதாகவும் மத்திய அரசு கருது கிறது. அதனால் ரொக்கப் பணம் இல்லாமல் மின்னணு பணப் பரி மாற்றத்தால் இவற்றை தடுக்க முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான உணவகங்கள் உட்பட மொத்தம் 19 இடங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நேற்று காலையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்து நாடாளுமன்ற உணவு குழு தலைவர் ஏ.பி.ஜிதேந்திர ரெட்டி கூறும்போது, “பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால், நாடாளுமன்ற உணவகங் களில் சாப்பிட வருபவர்கள் பணம் செலுத்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக, உணவக காசாளர்கள் சில்லறை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்தப் பிரச் சினைக்கு இந்த புதிய வசதி தீர்வாக அமையும். இந்த நடவடிக் கையால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.

இத்திட்டத்தை அமல்படுத்து வதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜிதேந்திர ரெட்டி, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி யின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in