

ஹைதராபாத்தில் ரூ.71 லட்சம் தொகைக்கான ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூவரும் தடை செய்யப்பட்ட நோட்டுகளுக்கு புதிய நோட்டுகளை மாற்றிக் கொண்டனர் என்று ஷம்ஷாபாத் ஏசிபி பி.அனுராதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முத்பூர் சந்திரா ரெட்டி, பாந்தி சிவா ரெட்டி, சத்யநாராயணா கவுத் ஆகியோர் இது தொடர்பாக கையும் களவுமாகச் சிக்கினர்.
ரூ.71 லட்சம் புதிய நோட்டுகளுடன் ரூ.11.21 லட்சத்திற்கு ரூ.100, 50, 20, 10 ஆகிய நோட்டுகளையும் வைத்திருந்தனர். சில தடைசெய்யப்பட்ட ரூ.500 நோட்டுகளும் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றிய துப்பு கிடைக்க கொத்தூர் சப் இன்ஸ்பெக்டர் ஏ.ஸ்ரீசைலம் வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார். அப்போது வந்த டாடா இண்டிகோ காரில் இந்த மூவரும் பணத்துடன் சிக்கினர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.