காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் மரணம் - பாலியல் துன்புறுத்தலுக்கான தடயம் இல்லை

காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் மரணம் - பாலியல் துன்புறுத்தலுக்கான தடயம் இல்லை
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் காரில் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கான தடயங்கள் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டெல்லியைச் சேர்ந்தவர் அஞ்சலி சிங் (20). கடந்த ஜனவரி 1-ம் தேதி அதிகாலையில் இவர் சென்ற ஸ்கூட்டியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, காரின் அடியில் சிக்கிக்கொண்ட அஞ்சலி 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சலியின் தாயார் சந்தேகத்தை எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து உயிரிழந்த அஞ்சலியின் பிரேத பரிசோதனை மவுலானா மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. அதில், அவரது உடலின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு அவர் ஆளாக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in