

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் 16-வது நாளாக நாடாளுமன்றம் நேற்றும் முடங்கியது. இதையடுத்து எதிர்க் கட்சிகள் மன்னிப்பு கோர வேண் டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. இந்த விவகாரம் தொடர் பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக்கோரி வலி யுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்த நாள் முதலாகவே அலுவல் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளன.
இந்நிலையில் நேற்று மக் களவை கூடியதும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆளுங்கட்சியை சாடும் வகையில் சில புள்ளிவிவரங்களை எடுத் துரைத்தார். அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தை முடக்கியதற்கு குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியே கண்டனம் தெரிவித்திருப்பதாக கூறி, அவரை மடக்கினர்.
எனினும் காங்கிரஸ் உறுப்பினர் களும் பதிலுக்கு உரத்த குரலில் பேச, இரு தரப்புக்கும் இடையே சூடான உரையாடல்கள் நிகழ்ந்தன. இதனால் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து 11.30 வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோது, மல்லிகார்ஜூன கார்கே, ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகவே உள்ளன’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த நாடாளு மன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார், ‘‘கடந்த 16 நாட்களாக அவையை முடக்கியதற்காக எதிர்க் கட்சிகள் அரசிடமும், நாட்டு மக்களிட மும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் 2-வது முறையாக அவை ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்த தால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் மீண்டும் வரும் புதன்கிழமை அவை கூடும் என அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு துரோகம்
மாநிலங்களவையிலும் நேற்று பல்வேறு பிரச்சினைகளை வலி யுறுத்தி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் கோதுமை மீதான இறக்குமதி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண் டித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2.30 மணிக்கு பின் மீண்டும் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.