தந்தையை இழந்த 236 பெண்களுக்கு இலவச திருமணம்: குஜராத் வைர வியாபாரி நடத்தி வைத்தார்

தந்தையை இழந்த 236 பெண்களுக்கு இலவச திருமணம்: குஜராத் வைர வியாபாரி நடத்தி வைத்தார்
Updated on
1 min read

தந்தையை இழந்த 236 இளம் பெண் களுக்கு, குஜராத் வைர வியாபாரி ஒருவர் நேற்று முன்தினம் இலவச திருமணம் செய்துவைத்தார்.

சூரத் நகரைச் சேர்ந்த மகேஷ் சவானி என்ற இந்த வைர வியாபாரி, பி.பி. சவானி குழுமம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 5 முஸ்லிம், 1 கிறிஸ்தவ பெண் உள்ளிட்ட 236 பெண்களுக்கு இவர் இலவச திருமணம் செய்துவைத்தார். சூரத் நகரில் நடந்த இந்த விழாவில் 236 பெண்களைத் தவிர சவானி குடும்பத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களும் திருமணம் செய்துகொண்டனர்.

இதுகுறித்து மகேஷ் சவானி கூறும் போது, “இதுபோன்ற இலவச திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது மகன் மிதுல், எனது மாமா மகன் ஜே ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்டனர். இந்த 236 பெண்களில் 5 பேர் மகாராஷ்டிர மாநிலத்தையும் 3 பேர் ராஜஸ்தானையும் ஒருவர் பிஹாரையும் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு தம்பதிக்கும் ஆடைகள், அணிகலன்கள், பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளோம்” என்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக இலவச திருமண விழாக்களை மகேஷ் சவானி நடத்தி வருகிறார். இதுவரை 708 பெண்களுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in