Published : 19 Jul 2014 11:49 AM
Last Updated : 19 Jul 2014 11:49 AM

அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம்: மாநிலங்களவையில் மைத்ரேயன் கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு விரைவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாநிலங் களவையில் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவையில் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக ஏழை, நடுத்தர மக்க ளுக்கு மாதம் ரூ. 70 கட்டணத்தில் 100 சேனல்கள் அரசு கேபிள் டிவி மூலம் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிகக்குறைவான கட்டணம் இது.

2.4-2008ல் அரசு கேபிள் டிவிக்கு கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு உரிமம் சென்னை நகரை உள்ளடக்கி மத்திய அரசு வழங்கியது. அதன்பின்னர் டிஜிட்டல் ஒளிபரப்பு முறைக்கு மாற்றி கேபிள் டிவி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து சென்னையில் டிஜிட் டல் ஒளிபரப்பை தொடங்க அரசு கேபிள் டிவி நடவடிக்கை எடுத்தது. இதற்கான உரிமம் கேட்டு மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகத் துக்கும் விண்ணப்பித்தது. சென்னை நகருக்கு இந்த உரிமம் கேட்டு 5.7.12லும் மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு 23.11.12லும் விண்ணப்பிக்கப்பட்டது.

அரசு கேபிள் டிவியின் இந்த விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தபோதும் அதற்கு பின் விண்ணப்பித்தவை உள்பட சுமார் 9 ஆபரேட்டர்களுக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு அளித்த விண்ணப்பம் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை என்றும், அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு உடனே டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x