Published : 02 Jan 2023 06:57 AM
Last Updated : 02 Jan 2023 06:57 AM

கங்கை உட்பட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ. பயணம்: உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சேவை

கங்கை விலாஸ் சொகுசு கப்பல்

புதுடெல்லி: கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் 7,500 கி.மீ. தொலைவு கடற்கரையும், 14,500 கி.மீ. தொலைவு நீர்வழித் தடங்களும் அமைந்துள்ளன. ஆனால் கடல்வழி, நதி வழிமூலம் நடக்கும் வர்த்தகம் 3.5 சதவீதமாக மட்டுமே உள்ளது. சீனாவில் 47 சதவீதம், ஐரோப்பிய நாடுகளில் 40 சதவீதம் அளவுக்கு நீர்வழிப் போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது.

இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சுமார் 111 நதிகளை தேசிய நீர் வழித்தடங்களாக மாற்றி சரக்கு, பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த சூழலில் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும் உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த அன்டாரா நிறுவனம், கங்கை விலாஸ் என்ற பெயரில் இந்த சொகுசு கப்பல் சேவையை இயக்க உள்ளது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தொடங்கி கொல்கத்தா மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா வழியாக அசாமின் திப்ருகர் வரை சொகுசு கப்பல் பயணம் செய்ய உள்ளது. வழிநெடுக காசிரங்கா தேசிய பூங்கா, சுந்தர வனக் காடுகள் உட்பட 50 சுற்றுலா தலங்களில் கப்பல் நின்று செல்லும். அண்டை நாடான வங்கதேசத்தில் மட்டும் சுமார் 1,000 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்ய உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x