

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே, இன்று காலை மர்ம பை ஒன்று தெண்பட்டது. பின்னர், சோதனையில் பதற்றம் ஏற்படுத்திய பையில் ஆபத்தான பொருட்கள் இல்லை என்று தெரியவந்தது.
டெல்லி அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் அருகே இன்று காலை சுமார் 8 மணி முதல் ஒரு மர்ம பை தெண்பட்டது. அங்கிருந்த காவலர்கள் இந்த மர்ம பை குறித்து புகார் தெரிவித்தவுடன், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில், பையில் ஆபத்தான பொருள் எதுவும் இல்லை, துணிகள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் தணிந்தது.
பாஜக தொண்டர் ஒருவர், பாஜக அலுவலகத்திற்கு அவரது மனைவியுடன் வந்ததாகவும், உணவு சாப்பிட்டு வரும் வரை அலுவலக வளாகம் அருகே பையை வைத்துவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.