பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்

பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

அவசர நேரத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வகையில், பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் (ஏர் ஆம்புலன்ஸ்) சேவை தொடங் கியுள்ளது.

ஏவியேட்டர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் இந்த சேவையை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா எச்ஏஎல் விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சித்தராமையா பேசும்போது, “பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளி களை ஏற்றிக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனையை அடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு பாதிப்பு தீவிரம் அடைவதுடன் சிலர் வழியிலேயே உயிரி ழக்கவும் நேரிடுகிறது.

தற்போது ஹெலிகாப்டர் ஆம் புலன்ஸ் சேவை தொடங்கப் பட்டுள்ளதால், நோயாளிகள் மிகுந்த நன்மை அடைவார்கள். உயிருக்கு ஆபத்தான நிலை யில் உள்ளவர்கள் மிக விரை வாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இந்த ஹெலிகாப்டர் ஆம் புலன்ஸில் அவசர உதவிக் கான சாதனங்களுடன் மருத்துவர்களும் இருப்பார்கள்.

முதல் கட்டமாக 3 ஹெலி காப்டர்கள் இந்த சேவையில் ஈடுபடுகின்றன. இந்த ஹெலிகாப் டர்களில் ஒரே இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவிலேயே ஓசை ஏற்படும். இது நோயாளிகளுக்கு சவுகர்யமாக இருக்கும் என ஏவியேட்டர்ஸ் ஏர் கெஸ்க்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in