

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பணத்தட்டுப்பாடு நிலவும் நிலையில், புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த புதிய ரூபாய் நோட்டுகள் கடந்த 2005-ல் மகாத்மா காந்தி படத்துடன் வெளியான ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும். அதேநேரம், புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டிருப்பது போல வரிசை எண்களின் அளவு சிறியதிலிருந்து பெரிதாக இருக்கும். மேலும் 2016 என அச்சிடப்பட்டிருப்பதுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும். அதேநேரம் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.