

நெசவு தொழில் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மத்திய அரசு சார்பில் விரைவில் இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த சேவை இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், அசாம் ஆகிய 7 மொழி களில் வழங்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசியில் நெசவாளர்கள் விளக்கம் கேட்கலாம். புதிய சேவை ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும்.
நாடு முழுவதும் 28 இடங்களில் நெசவாளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் சேவைகளை நெசவாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.