சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய கொல்கத்தா தொழிலதிபர் கைது: ராமமோகன ராவின் உறவினர் வீட்டில் விடிய விடிய சோதனை

சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய கொல்கத்தா தொழிலதிபர் கைது: ராமமோகன ராவின் உறவினர் வீட்டில் விடிய விடிய சோதனை
Updated on
1 min read

ஆந்திராவில் பணம், தங்கம், நிலப் பத்திரங்கள் பறிமுதல்

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள நிலப்பட்டா, தங்கம் மற்றும் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் உறவினர்கள் ஆந்திராவில் வசிக் கின்றனர். இவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் காலை 5.30 மணியிலிருந்து நேற்று அதிகாலை வரை வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

இதில் ராமமோகன ராவின் மகன் விவேக், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அவரது மாமனார் பத்ரி நாராயணாவின் வீட்டில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் வாடகை கார்களில் இங்கு வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 25 மணி நேரம் வரை விடிய, விடிய நடந்த சோதனையில் ஆந்திர மாநிலம் தமிழக எல்லை யில் உள்ள குடிபாலா, கங்காதர நெல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 120 ஏக்கர் நிலங்களுக்கான பத்திரம், ரூ.2 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய் யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரகாசம், குண்டுர், விஜயவாடா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக் கணக்கில் பணம், தங்கம் மற்றும் பினாமி நிலப்பட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பத்ரி நாராயணாவை விசாரிக்க நேற்று அவரை வருமான வரித் துறை அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப் படுகிறது. இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலதிபர் கைது

கறுப்புப் பணம் வைத்திருந்த சேகர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், அவருடன் தொடர்பு வைத்திருந்த கொல்கத்தா தொழிலதிபரை டெல்லியில் அமலாக்கத் துறையி னர் கைது செய்துள்ளனர். இவரும் ரூ.25 கோடி அளவுக்கு முறை கேடான முறையில் புதிய நோட்டு களை பெற்றிருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த தொழிலதிபரின் பெயர் பாரஸ் எம்.லோதா என்பதும், நேற்று முன் தினம் அவரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென் றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘சேகர் ரெட்டி மற்றும் ரோஹித் தாண்டன் வழக்குகளில் லோதாவுக்கும் தொடர்பு உள்ளது. சுமார் ரூ.25 கோடி அளவுக்கு முறைகேடான வகையில் புதிய நோட்டுகளை லோதா மாற்றியுள்ளார்’’ என்று தெரிவித்தன. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் லோதாவை அமலாக்கத் துறையி னர் கைது செய்து டெல்லி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in