இந்து தேசம்தான் இந்தியா!: கோவா துணை முதல்வர் சட்டசபையில் பேச்சு

இந்து தேசம்தான் இந்தியா!: கோவா துணை முதல்வர் சட்டசபையில் பேச்சு
Updated on
1 min read

இந்தியா இந்து தேசம்தான் என கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டி’சோசா தெரிவித் துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இந்து தேசமாக உருவெடுக்கும் என்ற கோவா அமைச்சர் தீபக் தவாலிகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், துணை முதல்வரின் கருத்தும் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரவாடி கோமண்டக் கட்சி பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த தீபக் தவாலிகர் கோவா அமைச்சராக உள்ளார். “மோடியின் தலைமையில் இந்தியா இந்து தேசமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் இதனைச் செய்து முடிப்பார் என்று கோவா சட்டப்பேரவையில் பிரதமர் மோடியைப் பாராட்டும் தீர்மானத்தின் மீது தவாலிகர் பேசியிருந்தார்.

இதுதொடர்பாகப் பேசிய கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டி’சோசா, தவாலிகரின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “இந்தியா இந்து தேசம்தான். இந்தியா இந்து நாடாக இருந்தது; இனிமேலும் இந்து நாடாகவே இருக்கும். இந்தியா என்பது இந்துஸ்தானம். இந்துஸ் தானில் உள்ள நான் உட்பட அனைவருமே இந்துக்கள்தான். நான் கிறிஸ்துவ இந்து. நான் இந்துஸ்தானத்தைச் சேர்ந்தவன். ஆகவே, நீங்கள் இந்தியாவை இந்து நாடாக்க வேண்டிய தில்லை. எந்தவொரு விஷயத் தையும் சர்ச்சைக்குரியதாக்கும் சுதந்திரம் மக்களுக்கு உண்டு. இந்தியா சுதந்திர நாடு. நாம் அனைவருடனும் இணைந்து செயல்பட வேண்டும். இது ஒருங்கிணைந்த ஜனநாயகம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் தவாலிகர் தனது கருத்து தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கவே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப்சிங் ராணே, தவாலிகரின் கருத்து அரசிய லமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றார்.

“அமைச் சராக உள்ள ஒருவர் பதவிப் பிரமாணத்தின் போது, இந்தியா மதச்சார்பற்ற நாடு என உறுதிகூறியிருப்பார். தற்போது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in