Published : 25 Jul 2014 10:27 AM
Last Updated : 25 Jul 2014 10:27 AM

விதையில்லா மாம்பழம்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

விதையில்லா திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து தற்போது நம் நாட்டின் வேளாண் விஞ்ஞானிகள் விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.

இது நல்ல வளர்ச்சி அடைந்தவுடன் இயற்கையான மாம்பழத்தைப் போலவே நிறம், மணம் மற்றும் சுவையைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஹார் வேளாண் பல்கலைக்கழகம்தான் இந்த மாம்பழத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அப்பல்கலைக்கழகத்தின் தலைவர் வி.பி.படேல் கூறியதாவது:

ரத்னா மற்றும் அல்போன்ஸா மாம்பழ ரகங்களின் கலப்புகளில் இருந்து இந்த விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளோம். சிந்து என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விதையில்லா மாம்பழ ரகம் நாட்டின் பல்வேறு இடங்களில் பரிசோதனை முயற்சியாக பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மாம்பழத்தை தோப்புகளிலும், வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்க முடியும்.

இந்த மாம்பழத்தின் சராசரி எடை 200 கிராமாகவும், இதனுடைய கூழ் மஞ்சள் நிறத்திலும் மற்ற மாம்பழங்களைக் காட்டிலும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள கொங்கன் கிரிஷி வித்யாபீட ஆய்வு நிலையத்தில் முதன்முறையாக இந்த மாம்பழ ரகம் பயிரிடப்பட்டது. மூன்று ஆண்டு முடிவில் நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கிறது. இந்த மாம்பழம் நம் உள்ளூர் தட்பவெப்பத்தை ஏற்றுக்கொண்டு வளரக்கூடியது. என்றார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எல்.சவுத்ரி கூறும்போது, "இந்தப் பழ ரகத்தை பிஹாரில் உள்ள விவசாயிகளுக்குக் கொடுத்துப் பயிரிட இருக்கிறோம். இந்த ரகத்திற்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புகளும் இருக்கின்றன. 2015-ம் ஆண்டு இந்த ரகம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்" என்றார்.

தேசிய தோட்டக்கலைத் திட்டத் தின் கணக்குப்படி, இந்தியாவி லேயே மாம்பழ விளைச்சலில் பிஹார் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 38,000 ஹெக்டேரில் மால்டா, மல்லிகா, ஜர்தாலூ, குலாப்கா, பும்பாய், தசேரி, செளஸா உள்ளிட்ட பல் வேறு ரக மாம்பழங்கள் பயிரிடப் படுகின்றன‌.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x