

நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் அடுத்த 10, 15 நாட்களுக்குள் இப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘‘மத்திய அரசு தான் எடுத்த திடீர் முடிவால் ஏற்படும் விளைவுகளை சிறிதும் சிந்திக்கவில்லை. அதை எப்படி சமாளிப்பது என்ற முன் தயாரிப்புகளிலும் ஈடுபடவில்லை. இதனால் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை. கூட்டுறவு வங்கி களும் செயல்படாத விதத்தில் முடக் கப்பட்டுள்ளன’’ என வாதாடினார்.
இதற்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின், அரசு வெறுமனே அமர்ந்து நிலைமையை வேடிக்கை பார்க்கவில்லை. உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட் டுள்ளது. 10 அல்லது 15 நாட்களுக் குள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும். பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் உள் நோக்கத்துடனேயே நீதிமன்றங் களில் இவ்வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கும் முடிவு மிக ரகசியமாக மேற் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக முன்கூட்டியே நோட்டுகள் அச் சடித்து வைக்கப்படவில்லை. புதிய நோட்டுகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற் காகவே பணம் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பழைய ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள் பெறுவதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதி பதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரம் குறித்து பரிசீலித்த நீதிபதிகள் கூட் டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச வாக்குறுதியுடன் பணத்தைப் பெறு வதற்கும், பழைய ரூபாய் நோட்டு களை டெபாசிட் செய்வதற்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர். அத்துடன் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் உத்தரவிட்டனர்.