

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரில் பணி நேரத்துக்கு பிறகு வங்கி ஊழியர்கள் பணம் பட்டுவாடா செய்ய மறுத்ததால் ஊழியர்களுடன் வங்கிக்கு பூட்டு போடப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி கேட்டுக்கொண்ட பிறகும், பணி நேரத்துக்குப் பிறகு ஊழியர்கள் பணம் பட்டுவாடா செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வங்கிக்கு பூட்டு போட்டனர்.
பின்னர் தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்து சென்று வங்கி ஊழியர்களை விடுவித்தனர்.