கரோனா கட்டுப்பாடு தேவையில்லை; முன்னெச்சரிக்கை அவசியம் - வைரலாஜிஸ்ட் ககன்தீப் கங் தகவல்

ககன்தீப் கங்
ககன்தீப் கங்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த பிரபல வைரலாஜிஸ்ட் ககன்தீப் கங் நேற்று கூறியதாவது: சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனாவின் தாக்கம் மோசமான நிலையில் இல்லை. எனவே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை. மேலும் குளிர்காலம் சீனாவில் கரோனா தொற்றின் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

அதேநேரம், நாம் செலுத்திக் கொண்ட தடுப்பூசிகள் சிறப் பாக வேலை செய்கின்றன. இந்தியாவில் பிஎப்.7 மற்றும் எக்பிபி வைரஸ் தொற்று பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அது அலையாக உருவெடுக்கவில்லை. எனவே அந்த வைரஸ்களை கண்டு அஞ்ச தேவையில்லை. ஆனால், முகக்கவசம், அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம். முதியவர்கள், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங் களுக்கு செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது நல்லது. இவ்வாறு வைரலாஜிஸ்ட் ககன்தீப் கங் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in