இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: கரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020 ஏப்ரலில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லதுஅரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in