

தமிழகத் தலைவர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் தேச அளவில் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடலுக்கு பொதுமக்கள், தலைவர்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, இன்று ஒருநாள் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது.
தமிழக அரசு 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரித்துள்ளது. கேரள அரசும், கர்நாடக அரசும் ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளன.