

ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம், ஸ்ரீகப்வாரா தாலுகா, பீவ்ரா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி யால் சுட்டனர். இதையடுத்து ஏற் பட்ட மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இவர் ஹிஸ்புல் தீவிரவாதி பாசிட் அகமது தார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுபோல் பாரமுல்லா மாவட்டம், சோப்பார் அருகில் உள்ள பொமாய் என்ற இடத்தில் நடைபெற்ற மற்றொரு மோதலில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு பக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.