ஏர்செல் வழக்கில் நீதிமன்ற உத்தரவு தள்ளிவைப்பு

ஏர்செல் வழக்கில் நீதிமன்ற உத்தரவு தள்ளிவைப்பு
Updated on
1 min read

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது அண்ணன் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றம் தனது உத்தரவை வரும் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்த உத்தரவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி நேற்று பிறப்பிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் உத்தரவு இன்னும் தயார் ஆகாததால் இதனை வரும் 19-ம் தேதிக்கு நீதிபதி சைனி தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in