

பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த் தியது, உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி தொழிலை வலுப்படுத் தும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை என்று பாது காப்பு அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி யில் மேலும் கூறும்போது “எனது இந்த பரிந்துரையை நாடாளுமன்ற மும் மக்களும் ஏற்றுக்கொள் வார்கள். எப்டிஐ வரம்பை 49 சதவீதமாக உயர்த்தியது போது மானது. இதற்கு மேல் உயர்த்தி னால் உள்நாட்டில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 51 சதவீத பங்குகள் இந்தியர் வசம் இருப்பதன் மூலம் இந்த நிறு வனங்கள் இந்தியர்களால் நிர்வகிக் கப்படும். 49 சதவீத எப்டிஐ வரம்புக்குள் தொழில்நுட்பம், முதலீடு, உற்பத்தி மேம்படும் போது அரசியல் கட்சிகளும் பொது மக்களும் இம்முடிவை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அரசின் இதர துறைகள், ஆயுதப் படை கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு எடுக்கப்பட்டது.
இந்த சீர்திருத்தம் போதுமான அளவுக்கு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளால் ஏற்க இயலாத அளவில் சீர்திருத்தங்களை செய் யக்கூடாது.
அவ்வாறு செய்தால் சில்லறை வணிகத்தில் எப்டிஐ முடிவைத் திரும்பப் பெற்றது போன்ற நிலை தான் ஏற்படும்” என்றார்.
பட்ஜெட் ஒரு தொடக்கமே
இந்நிலையில் பிடிஐ செய்தி யாளருக்கு அருண் ஜேட்லி அளித்த பேட்டியில், “பட்ஜெட்டில் போதுமான அளவு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது. எங்கள் பயணத்தின் தொடக்கமே இந்த பட்ஜெட். அனைத்து முடிவுகளையும் ஒரே நாளில் எடுக்க முடியாது.
நேரடி வரியில் ரூ. 22,200 கோடி தியாகம் செய்து மாத சம்பளம் பெறுவோருக்கு நிம்மதி அளித் துள்ளோம். நாட்டுக்குத் தேவை யான, அதேநேரம் கடந்த 10 ஆண்டு களாக எடுக்கப்படாமல் இருந்த பல முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்” என்றார்.