மோடியை எதிர்த்த மனு தள்ளுபடி

மோடியை எதிர்த்த மனு தள்ளுபடி
Updated on
1 min read

நாடாளுமன்றத்துக்கு கடந்த 2014-ல் தேர்தல் நடந்தது. அப் போது மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டி யிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜெய் ராய் களமிறங் கினார். ‘இந்தத் தேர்தலில் அதிக அளவில் பிரதமர் மோடி பிரச்சாரத் துக்குச் செலவிட்டு வெற்றிப் பெற்றார். எனவே அவர் வெற்றி செல்லாது’ என அறிவிக்கக் கோரி அஜெய் ராய் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விக்ரம் நாத், ‘‘மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்த ஆவணங்களும் சமர்பிக்கப்பட வில்லை. அரை மனதுடன் இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இம்மனு தள்ளுபடி செய்யப் படுகிறது’’ என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in