

ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தின் வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் கொரில்லாக்கள் புதைத்து வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை பாது காப்புப் படையினர் அப்புறப் படுத்தினர்.
ராஞ்சியில் இருந்து 140 கிமீ தொலைவில் உள்ள லதேஹர் மாவட்ட வனப் பகுதிகளில் பாது காப்புப் படையினர் வழக்கமான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட் டிருந்த போது, ஆங்காங்கே வெடி குண்டுகள் புதைத்து வைக்கப்பட் டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை பாது காப்பாக அப்புறப்படுத்தி, செய லிழக்கச் செய்தனர். பாதுகாப்புப் படையினரை குறிவைத்து மாவோ யிஸ்ட்கள் இந்த பயங்கர வெடி குண்டுகளை புதைத்து வைத்த தாக போலீஸ் அதிகாரிகள் தெரி வித்தனர்.